கலவரத்தைத் தூண்டினார் கருணாநிதி.. 3 பிரிவுகளில் "கேஸ்" போட்ட போலீஸ்!

அதிமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று அதிமுகவினர் பல்வேறு போராட்டங்கள், கட்டாயக் கடையடைப்பு, பஸ் மறியல், கல்வீச்சு உள்ளிட்ட வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில் திமுக தலைவர் மற்றும் பொருளாளர் மீது வழக்குப் பாய்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை, ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதம், மற்றவர்களுக்குத் தலா 10 கோடி அபராதம் என பெங்களூர் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் குதித்தனர். கல்வீச்சு, கட்டாயக் கடையடைப்பு உள்ளிட்ட வன்முறையால் பொதுமக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தனர்.
மேலும் திமுக தலைவர் கருணாநிதி, சொத்துக் குவிப்பு வழக்கின் முக்கிய காரணகர்த்தாவான சுப்பிரமணியம் சாமி ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. திமுகவினரின் வீடுகள், கட்சி அலுவலகங்களும் கூட தாக்குதலுக்குள்ளாகின.
இந்தநிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டைத் தாக்கச் சென்ற அதிமுகவினருக்கும், அங்கு குழுமியிருந்த திமுகவினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. அதில் அதிமுகவைச் சேர்ந்த செனாய் நகர் விமல், அமிஞ்சிக்கரை மோகன், அடையார் அசோக், அண்ணாநகர் ஹரிகுமார், சிந்தாதிரிப் பேட்டை வேல்முருகன் ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த 6 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் ராயப்பேட்டை போலீஸில் ஒரு புகார் கொடுத்தனர். அதில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் 200-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கோபாலபுரம் 2-வது தெருவில் எங்களை மறித்து பயங்கரமாக கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து போலீஸார், கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் பெயர் தெரியாத திமுகவினர் உள்பட மொத்தம் 500 பேர் மீது கலவரத்தைத் தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளனர்.
கருணாநிதி கலவரத்தைத் தூண்டினார் என்றால் தமிழகம் முழுவதும் நேற்று அதிமுகவினரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் யாரிடம் போய் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையே!
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications