திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவியுடன் உல்லாசமாக இருந்த மாணவருக்கு ஆண்மை சோதனை
கோவை: கல்லூரி தோழியை திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்த மாணவனுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கோவை, சீனியம்பாளையம், டீச்சர்ஸ் காலனியில் வசிப்பவர் சீனிவாசன். இவர் கோவை தனியார் இன்ஜினியரிங் கல்லூரியொன்றில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் மாணவியும் இவரும் காதலித்துள்ளனர்.
மாணவியை அனுபவிக்க திட்டமிட்ட சீனிவாசன், "வா எனது வீட்டுக்கு உன்னை அழைத்துப்போகிறேன். எங்கள் அம்மா ரொம்ப பிரண்ட்லி டைப். அவர்கள் உன்னை மருமகளாக ஏற்றுக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு" என்று கூறி அழைத்துள்ளார்.
இதை நம்பிய மாணவியும், புதிய ஆடைகளை உடுத்திக்கொண்டு, தலைநிறைய பூ வைத்துக்கொண்டு, சீனிவாசனுடன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால் சீனிவாசனுக்கு மட்டுமே தெரியும், அன்று அவரது பெற்றோர்கள் ஊரில் இல்லை என்பது. வீட்டுக்குச் சென்றபிறகுதான், "ஐயையோ... என் அம்மாவும், அப்பாவும் அவசரமாக வெளியூர் சென்றுவிட்டார்களாமே, இப்போதுதான் போன் செய்தார்கள்" என்று கூறி அதிர்ச்சியடைந்தவரை போல முகத்தை வைத்துக்கொண்டார்.
இதையடுத்து இன்னொரு நாள் வரலாம் என்று கூறி கிளம்ப முயன்ற மாணவியை, வந்தது வந்துவிட்டாய், ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும் என்று கூறி உல்லாசமாக இருக்க முயன்றுள்ளார். வீடு வரை கூப்பிட்டுவந்துள்ளார், திருமணம் செய்துகொள்வார் என்று நினைத்து அந்த பெண்ணும் ஆசைக்கு இணங்கியுள்ளார்.
ஆனால் இந்த சம்பவத்துக்கு பிறகு மாணவியை சந்திப்பதை சீனிவாசன் தவிர்த்துவந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மாணவி, என்னை ஏன் புறக்கணிக்கிறாய் என்று கேட்டதற்கு, நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப்போகிறேன் என்று கூறிவிட்டாராம். ஆத்திரமடைந்த மாணவி போலீசில் புகார் அளிப்பேன் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கும் அசராத, சீனிவாசன், அப்படி செய்தால், நீயும், நானும் இருக்கும்போட்டோவை பேஸ்புக்கில் போட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதற்கெல்லாம் அஞ்சாத மாணவி, கோவை கிழக்குப்பகுதி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சீனிவாசன் மீது கொலை மிரட்டல், ஏமாற்றுதல், பாலியல் பலாத்காரம் செய்தல் ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையறிந்த சீனிவாசன் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்யமுடியவில்லை. இருப்பினும் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், சீனிவாசனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆண்மை பரிசோதனை செய்யவும், மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications