ஆளுநர் கிரண்பேடியை மிரட்டும் தொனியில் பேச்சு.. முதல்வர் நாராயணசாமி மீது பாஜகவினர் புகார்

புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மிரட்டும் தொனியில் பேசியதாக முதல்வர் நாராயணசாமி மீது பா.ஜ.க நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றது முதல் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் தனக்கே முழுமையான அதிகாரம் இருப்பதாக கூறி ஆளுநர் கிரண்பேடி அரசின் அன்றாட பணிகளில் தலையிட்டு வருகிறார்.

police complained against pudhucherry cm Narayanasamy

பல்வேறு மக்கள் நலத் திட்டங்களில் கிரண் பேடியே உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். அதே சமயம் சம்மந்தப் பட்ட துறையின் செயலாளருக்கு இது தெரிவிக்கப்படுவதில்லை. துறையின் செயலாளரும், அமைச்சரும் செய்ய வேண்டிய காரியங்களை துணை நிலை ஆளுநர் செய்து கொண்டிருப்பதால் ஏகப்பட்ட குழப்பங்கள் தற்போது புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கின்றன. அதோடு அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்களை சமூக வலை தளங்களிலும் விமர்சனம் செய்து வருகிறார்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்வர் நாராயணசாமி, மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்து பேசினார். அப்போது பேசிய அவர், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை ஆளுநர் இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும், சமூக வலைதளங்களிலும், புதுவை அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் விமர்சிக்க கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் கூறினார்.

இந்தநிலையில் முதல்வர் நாராயணசாமி மீது பாஜக நிர்வாகிகள் பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புதுவை மாநில பாஜக தலைவர் செல்வம், பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் அளித்துள்ள புகாரில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மிரட்டும் தொனியில் நாராயணசாமி பேசி வருவதாக மனுவில் கூறியுள்ளனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+