'பெண்களை இழிவுபடுத்தும் பேட்டி'.... ராதாரவி மீது புகார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேட்டியளித்ததாகக் கூறி நடிகர் ராதாரவி மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் செயல்படும் மனித உரிமைகள் கழகம் என்ற கட்சியின் மகளிர் பிரிவு சார்பில் இந்த புகார் தரப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில், ‘தென் இந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான ராதாரவி தனியார் இணையதள தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துள்ளார். அதில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications