சேகர் ரெட்டியின் சிறைக் காவல் மார்ச் 14 வரை நீட்டிப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேகர் ரெட்டி உள்ளிட்ட மூவரின் சிறைக் காவல் மார்ச் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டி, சீனிவாசலு மற்றும் பிரேம்குமார் உள்ளிட்ட மூவரின் சிறைக் காவலை வரும் மார்ச் 14-ஆம் தேதி நீட்டித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து ரூ. 136 கோடி பணமும், 179 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ.34 கோடி புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் அடங்கும்.

இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு, ஆடிட்டரும், நண்பருமான பிரேம்குமார் உள்ளிட்டோர் கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்ற காவல் கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வகையில் அவரை சிபிஐ அதிகாரிகள் சிறைக் காவலில் எடுத்து மூவரிடமும் விசாரணை நடத்தி வந்தனர். குற்றம்சாட்டப்பட்ட அந்த 3 பேரது சிறைக் காவலுக்கு நீதிமன்றம் விதித்த காலம் முடிவடைந்தநிலையில் அதை நீட்டிக்க அனுமதி கோரி சென்னனை சிபிஐ நீதிமன்றத்தில் அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.
அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சேகர் ரெட்டி உள்ளிட்ட மூவரின் சிறைக் காவலை வரும் மார்ச் 14-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications