மோடி பங்கேற்ற மானிய ஸ்கூட்டர் விழாவுக்கு லேட்டா வந்த தமிழிசை.. அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு!
பிரதமர் மோடி பங்கேற்ற மானிய ஸ்கூட்டர் விழாவுக்கு தாமதமாக வந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற மானிய ஸ்கூட்டர் விழாவுக்கு தாமதமாக வந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்படி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடிக்கு வரவேற்பு
முன்னாதாக விழாவில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர், துணை முதல்வர், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எம்பிக்கள் உள்ளிட்ட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தாமதமாக வந்த தமிழிசை
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பிரதமர், ஆளுநர், முதல்வர் உள்ளிடோர் வந்த பிறகு தாமதமாக வந்தார் தமிழிசை.

வாக்குவாதம் செய்த தமிழிசை
இதனால் பாதுகாப்பு கருதி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழிசை போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவருக்கு விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

விமான நிலையத்லும் இல்லை
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக விமான நிலையத்திற்கு வந்த மோடியை வரவேற்கும் இடத்திலும் தமிழிசை சவுந்தரராஜன் காண முடியவில்லை. பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவரான தமிழிசைக்கு அனுமதி மறுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications