கொடூர கொலைகளை செய்த அபிராமி சிக்கியது எப்படி?.. போலீஸார் பரபர தகவல்
Recommended Video

சென்னை: குன்றத்தூர் அருகே இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பியோடிய தாய் அபிராமியை போலீஸார் எப்படி கைது செய்தனர் என்பது குறித்து போலீஸார் தகவல் அளித்துள்ளனர்.
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் (30). இவர், சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் வங்கி பணியாற்றி வருகிறார்.

போலீஸார் கைது செய்தனர்
இவரது மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய், கார்னிகா என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கள்ளக்காதலுக்காக இரு குழந்தைகளை கொன்றுவிட்டு நாகர்கோவில் தப்பிஓடிய அபிராமியை போலீஸார் கைது செய்தனர். நேற்றைய தினம் கள்ளக்காதலன் சுந்தரத்தை போலீஸார் கைது செய்திருந்தனர்.

தம்பதியிடையே தகராறு
அபிராமியை எப்படி பிடித்தனர் என்பது குறித்து போலீஸார் தகவல் அளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில் விஜயின் மனைவி அபிராமி அப்பகுதியில் அனைவருடனும் பேசுவது விஜய்க்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் மீது சந்தேகப்பட்டனர். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

தேடுதல் வேட்டை
அபிராமி, அடிக்கடி கணவரிடம் கோபித்துக் கொண்டு அருகில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிடுவார். இந்த சூழலில்தான் அவருக்கு சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சுந்தரத்தை கைது செய்தோம். அவரை வைத்து அபிராமியை பிடிக்க திட்டமிட்டோம். அதன்படி சுந்தரத்தை உடன் வைத்துக் கொண்டே தேடுதல் வேட்டையை தொடங்கினோம்.

அபிராமியை வரவழைத்தோம்
அபிராமியிடம் சுந்தரத்தை போனில் பேச வைத்து அவர் இருக்கும் இடத்தை கேட்டோம். அதற்கு அவர் தான் திருவனந்தபுரத்தில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நான் நாகர்கோவிலுக்கு வந்துவிட்டேன், நீயும் இங்கே வந்துவிடு, நாம் இருவரும் வேறெங்காவது சென்றுவிடலாம் என சுந்தரத்தை வைத்து அபிராமியை வரவழைத்தோம்.

மடக்கி பிடித்தோம்
இதை நம்பிய அபிராமி நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்து அபிராமியை மடக்கி பிடித்தோம். இதையடுத்து இருவரையும் இன்று காலை சென்னைக்கு அழைத்து வந்தோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications