மோடியை சென்னையில் கொலை செய்ய திட்டம் தீட்டினோம்: போலீஸ் பக்ருதீன் வாக்குமூலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை சென்னையில் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருந்தோம் என்று தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக போலீஸ் பக்ருதீனை சென்னை போலீசார் கட்டிப் புரண்டு சண்டை போட்டு கைது செய்தனர். அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை தமிழக போலீசார் சுற்றி வளைத்தனர்.

ஆனால் அவ்வளவு எளிதாக பிலாலையும் பன்னா இஸ்மாயிலையும் போலீசாரால் பிடிக்க முடியவில்லை. சுமார் 10 மணி நேர சண்டைக்குப் பின்னரே இருவரும் சிக்கினர். தற்போது போலீஸ் கஸ்டடியில் இருக்கும் பக்ருதீனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அத்வானியை கொல்ல பைப் வெடிகுண்டு

அத்வானியை கொல்ல பைப் வெடிகுண்டு

பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானியை கொலை செய்யும் நோக்கத்தில்தான் திருமங்கலம் பாலத்தின் அடியில் குண்டு வைத்தோம். ஆனால் அது நிறைவேறவில்லை.

வளர்ந்து வரும் இந்து தலைவர்கள்..

வளர்ந்து வரும் இந்து தலைவர்கள்..

இதைத் தொடர்ந்து வளர்ந்து கொண்டு இருந்த இந்து தலைவர்கள் சேலம் ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன், தென்காசியில் குமார பாண்டியன் ஆகியோரை கொலை செய்தோம். இன்னும் சில இந்து தலைவர்களை குறி வைத்து தாக்கினோம்.

புத்தூரில் பதுங்கல்

புத்தூரில் பதுங்கல்

தமிழகத்தில் போலீசார் எங்களைப் பிடிக்க வலை விரித்ததால் தமிழக- ஆந்திர எல்லையான புத்தூருக்கு இடம்பெயர்ந்தோம்.

சென்னை அரசு ஊழியர் வீட்டில்..

சென்னை அரசு ஊழியர் வீட்டில்..

சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் வீட்டில்தான் 6 மாதத்திற்கு முன்பு வாடகைக்கு இருந்தோம்.

பகலில் இரும்பு வியாபாரம்.. இரவில் சதி

பகலில் இரும்பு வியாபாரம்.. இரவில் சதி

நாங்கள் பகலில் இரும்பு வியாபாரம் செய்வோம். இரவில்தான் சதித்திட்டம் தீட்டுவோம். ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன் ஆகியோரை கொலை செய்ய இங்கு தான் சதித் திட்டம் தீட்டப்பட்டது.

பிரமோற்சவத்தில் நாசவேலை

பிரமோற்சவத்தில் நாசவேலை

தற்போது திருப்பதியில் நடக்க உள்ள பிரமோற்சவத்திலும் சென்னையில் இருந்து வரும் குடை ஊர்வலத்தையும் தடுக்கும் வகையில் நாங்கள் சதித் திட்டம் தீட்டினோம்.

மோடிக்கு குறி

மோடிக்கு குறி

மேலும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 18ந் தேதி சென்னை வர திட்டமிட்டுள்ளார். அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து திட்டம் தீட்டிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் போலீசிடம் சிக்கிவிட்டோம்.

மிஸ்டு கால் சிக்னல்

மிஸ்டு கால் சிக்னல்

அத்துடன் போனில் பேசினால் டவர் சிக்னல் மூலம் போலீசார் எங்களை கண்டுபிடித்து விடுவார்கள். இதனால் மிஸ்டு கால் யுக்தியை கையாண்டோம்.

சிக்னலுக்கு அர்த்தம் என்ன?

சிக்னலுக்கு அர்த்தம் என்ன?

ஒரு திட்டத்தை தொடங்க வேண்டுமென்றால் ஒரு மிஸ்டு கால் கொடுப்போம். அதை முடித்துவிடு என்றால் 2 மிஸ்டு கால் கொடுப்போம். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் மிஸ்டுகால் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு திட்டத்தை செயல்படுத்தினோம். இவ்வாறு போலீசில் பக்ருதீன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.

திருட்டு செல்போன்

திருட்டு செல்போன்

தீவிரவாதி பக்ருதீன் திருட்டு செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். அவனது செல்போனுக்கு பெங்களூர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள பல தீவிரவாதிகள் மிஸ்டு கால் கொடுத்துள்ளனர். இதனால் பெங்களூர் போலீசாரும் பக்ருதீனை விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

யார் யாருக்கு குறி?

யார் யாருக்கு குறி?

அத்துடன் தீவிரவாதி பக்ருதீன் வைத்திருந்த டைரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் பாரதிய ஜனதாவின் முக்கிய பிரமுகர்கள் 2 பேர், இந்து முன்னணி முக்கிய நிர்வாகி, விஷ்வ இந்து பரிஷத்தை சேர்ந்த 2 பேர், ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஒருவர், இந்து மக்கள் கட்சி முக்கிய பிரமுகர் ஆகியோரது பெயர்களும் இருந்துள்ளன. பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+