விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேச்சு.. சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முள்ளி வாய்க்கால் குறித்த நினைவேந்தல் கூட்டம் நாம் தமிழர் கட்சி கடந்த சார்பாக மே மாதம் 18-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னை கொட்டிவாக்கம் அருகே உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் நடந்தது.

1000க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இலங்கையே போர் குறித்து பேசினார். அதோடு, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நிறைய கருத்துக்களை பேசினார் .
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், அவர் மீண்டும் திரும்ப வருவார் என்று கூறியுள்ளார். அதேபோல் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக சில முக்கியமான விஷயங்களை பேசியுள்ளார்.
இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் வழக்கு பதியப்பட்டுள்ளது. தரமணி போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications