வக்கீலை பார்க்க விடவில்லை.. வழக்கு விவரத்தை சொல்லவில்லை.. நக்கீரன் கோபாலுக்கு போலீஸ் கெடுபிடி
நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபாலை அவரது வக்கீலை பார்க்க விடாமல் போலீஸ் கெடுபிடியாக இருந்துள்ளது.
சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபாலை அவரது வக்கீலை பார்க்க விடாமல் போலீஸ் கெடுபிடியாக இருந்துள்ளது.
இது அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
[ ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் செயல் இது.. கமல் கண்டனம் ]

வைகோ கைது செய்யப்பட்டார்
இந்த நிலையில் காலை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள போலீஸ் நிலையத்தில் நக்கீரன் கோபாலை சந்திக்க வைகோ முயற்சி செய்தார். ஆனால் அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதோடு அவர் கைது செய்யப்பட்டு அந்த இடத்தில் இருந்தும் அப்புறப்படுத்தப்பட்டார்.

வழக்கறிஞர்
மேலும் நக்கீரன் கோபால் அவரது வழக்கறிஞரை சந்திக்க போலீஸ் அனுமதிக்கவில்லை. கடைசியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தும் முன் சில நிமிடங்கள் மட்டுமே இவர்கள் சந்தித்து இருக்கிறார்கள். அந்த சந்திப்பு முன்பு வரை நக்கீரன் கோபால் மீது என்ன மாதிரியான வழக்கு பதியப்பட்டு இருக்கிறது என்ற உண்மை நிலவரம் நக்கீரன் கோபாலின் வழக்கறிஞருக்கு தெரியாமல் இருந்துள்ளது.

ஸ்டாலின் சந்திப்பு
ஆனால் ஸ்டாலின் மட்டும் நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்கப்பட்டார். ஸ்டாலின் உடன் ஆ.ராசா மற்றும் துரைமுருகன் உடன் இருந்தனர். திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கூற மறுப்பு
இவர் மீது எந்த பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது என்றும் போலீஸ் நேரடியாக தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது. நக்கீரன் கோபால் மீது 124வது பிரிவின் கீழ் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானாலும் போலீஸ் இது பற்றி முறையாக அறிவிக்காமல் அலைக்கழித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications