மே 17 இயக்கம் முற்றுகையிடப்போவதாக தகவல்.. சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனிதா தற்கொலை சம்பவத்தையடுத்து சென்னையிலுள்ள பாஜக தலைமையகம் கமலாலயத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் அரியலூர் மாவட்ட மாணவி அனிதா. ஆனால் மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத்தரவில்லை. உச்சநீதிமன்றத்தில் திடீரென பல்டியடித்து நீட் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது மத்திய அரசு.

 Police force increased in TN BJP head office as Anitha committed suicide

இதனால் டாக்டர் கனவுபறிபோன ஆதங்கத்தில், அனிதா, மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டார். தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இயக்குநர் கவுதம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அனிதாவின் வீடு அமைந்துள்ள பகுதியில் இன்று காலை போராட்டம் நடத்தினர். இதனிடையே சென்னையிலுள்ள பாஜக தலைமை அலுவலகமாக கமலாலயத்தை மே 17 இயக்கத்தினர் முற்றுகையிட வருவதாக தகவல் வெளியானதால் பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+