சேலத்தில் மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்... பந்தல்கள் அகற்றம்.. பரபரப்பு
சேலம்: சேலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் மாணவ்ரகள் கூடாதபடி பாதுகாப்பு அரண்களை அமைத்து ஏராளமான போலீசார் அங்கு குவிந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் பொது மக்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அனைத்து போராட்டக் களத்திலும் இன்று காலை குவிந்த காவல்துறையினர் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றும் தரதரவென இழுத்துச்சென்றும் வெளியேற்றினர்.

சேலத்தில் அதிரடியாக இறங்கிய போலீசார் போராட்டக் களத்தில் இருந்தவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினர். இதற்கு போராட்டக் குழுவினர் மறுத்ததால் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
வர மறுத்தவர்களை தரதரவென இழுத்துச்சென்றனர். பலரை குண்டுக்கட்டாக துக்கிச்சென்றும் போராட்டக் களத்தை காலி செய்தனர்.
மேலும் அங்குப் போடப்பட்டிருந்த பந்தல்களையும் போலீசார் அவசர அவசரமாக அகற்றினர். மீண்டும் மாணவர்கள் அங்கு கூடாபடி அரண்களையும் போலீசார் அமைத்தனர். போராட்டம் மீண்டும் நடந்துவிடாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசாரும் அங்கு குவிந்துள்ளனர்.
இதேபோல் சேலத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் மாணவர்களின் பிடியில் இருந்த ரயிலையும் போலீசார் மீட்டனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications