6 நாள் போலீஸ் காவலில் பக்ருதீன்... போலீஸார் தீவிர விசாரணை

பல முக்கிய வழக்குகளில் குற்றவாளியான பக்ருதீனை சென்னையில் போலீஸார் கடுமையாகப் போராடி பிடித்துக் கைது செய்தனர். பக்ருதீன் மீது பல முக்கிய வழக்குகள் உள்ளதால் அவன் பிடிபட்டது காவல்துறைக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது.
கைது செய்யப்பட்ட பக்ருதீன நேற்று வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் காவல்துறை சார்பில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தாக்கல் செய்த மனுவில், பரமக்குடியில் முருகன், வேலூரில் மாநில பா.ஜ.க. மருத்துவ அணிச் செயலர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, மதுரையில் சுரேஷ், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ், வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் ஆகிய 5 பேரின் கொலை வழக்கு சம்பந்தமாக போலீஸ் பக்ருதீனிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 13 தினங்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதுகுறித்து பக்ருதீன் மாஜிஸ்திரேட்டிம் கூறுகையில்,நான் போலீஸ் காவலில் செல்லத் தயார். ஆனால் நாட்களைக் குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான். இதையடுத்து 6 நாள் காவலை அனுமதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து பக்ருதீனை அழைத்துச் சென்ற போலீஸார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications