போர்க்களமானது அலங்காநல்லூர்- போலீஸ் மீண்டும் பயங்கர தடியடி காளைகள் சிறைபிடிப்பு!!
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு நடத்த வலியுறுத்தி திரண்ட இளைஞர்கள் மீது போலீசார் மீண்டும் பயங்கரமாக தடியடி நடத்தினர். இதனால் அலங்காநல்லூர் போர்க்களமானது.
மதுரை: அலங்காநல்லூரில் திரண்ட இளைஞர் கூட்டம் மீது போலீசார் பயங்கர தடியடி நடத்தினர். இதனால் போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அலங்காநல்லூரே போர்க்களமாக காட்சி தருகிறது.
உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி அலங்காநல்லூர் மைதானத்தில் இன்று ஜல்லிக்கட்டு காளை அவிழ்த்துவிடப்பட்டது. இருந்தபோதும் ஜல்லிக்கட்டு நடைபெறக் கூடிய வாடிவாசல் பகுதிக்கு கோயில் மாடுகள் உட்பட எதனையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூரில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கூட்டம் காலை முதலே திரண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி அமைதி பேரணியும் இன்று நடத்தப்பட்டது.
இதன் பின்னர் வாடிவாசல் அருகே இளைஞர்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாடிவாசல் செல்லும் சாலையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் அவர்களை கலைந்து செல்ல முதலில் லேசான தடியடி நடத்தினர்.
Madurai (Tamil Nadu): Villagers protest in support of #jallikattu in Alanganallur, lathicharged by Police. Bull seized by Police pic.twitter.com/CZyEVxorQK
— ANI (@ANI_news) January 16, 2017
இதனால் போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு போராட்டது. அப்போது போலீசார் பயங்கரமாக இளைஞர்கள் மீது தடியடி நடத்தினர். இக்கொடூர தாக்குதலில் சிக்கிய பலருக்கும் கால் எழும்புகள் முறிந்தன.
அலங்காநல்லூர் மைதானத்தில் இருந்த கோயில் காளைகளையும் போலீசார் சிறைபிடித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டனர். தற்போது அலங்காநல்லூர் போர்க்களமாக காட்சி தருகிறது.












Click it and Unblock the Notifications