மகேந்திரகிரி மர்ம விமான விவகாரம்... தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டது போலீஸ்
நெல்லை: நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோ திரவ இயக்க திட்ட வளாகத்தின் மீது மர்ம விமானம் பறந்தது தொடர்பாக நெல்லை சரக டிஐஜி, மாவட்ட எஸ்பி மேற்பார்வையில் போலீசார் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது மகேந்திரகிரி இஸ்ரோ திரவ இயக்க திட்ட ஊத்தும வாளகத்தின் மேலே கடந்த இரண்டு நாட்களாக கிளைடர் விமானம் இரவு நேரத்தில் தாழ்வாக பறந்து வட்டமடித்து சென்றது. இதை பார்த்த பொதுமக்கள் பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கிளைடர் விமானம் பறந்தது குறித்து விசாரணை நடத்த வனப்பகுதிக்கு போலீசார் சென்றபோது மலையின் உள்ளே 7 கிமீ தொலைவில் கஞ்சிபாறை என்ற இடத்தில் செல்போன்களுக்கு சிக்னல் கிடைக்காத இடத்தில் கம்பியில்லாத வைபை இன்டர்நெட் சேவை சிக்னல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இஸ்ரோ மையத்திற்கு தீவிரவாதிகளால ஆபத்து ஏற்படுமா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மூன்று தினங்களாக இது வதந்திதான் என வனத்துறையினரும், போலீசாரும் கூறி வந்த நிலையில் நேற்று இரவு டிஐஜி அன்பு, எஸ்பி விக்ரமன் தலைமையிலான போலீசார் அங்கு முகாமிட்டு தீவிர சோதனை நடத்தினர்.
மதுரை இன்ஸ்பெக்டர் பிரதாப்சிங் தலைமையில் மலையேற்ற பயிற்சியில் அனுபவம் உள்ள போலீசார் 100 பேரும், கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை அலுவலர் விஷ்மு விஸ்வநாதன் தலைமையில் அனுபவம் உள்ள வனத்துறையினர் 30 பேரூம் வனத்தின் உள்பகுதியில் ஆட்கள் போக முடியாத பகுதியிலும் ஊடுருவி தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகி்ன்றனர்.
இதுகுறித்து எஸ்பி விக்ரமன் கூறுகையில் இதுவரை கிளைடர் விமானம் பறந்தது உறுதி செய்யப்படவில்லை இது உறுதிப்படுத்துவதற்கு வனத்தின் உள்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications