சிறுமி பலத்காரம்.. லாரி டிரைவருக்கு போலீஸ் வலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பள்ளி மாணவியை பலத்காரம் செய்த லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி 3ம் மைல் பகுதியை சேர்ந்தவர் கலாவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர் வீட்டை சேர்ந்த லாரி டிரைவரான தவசி பெருமாள் என்பவர் வீட்டிற்கு சென்று அவரது மகளுடன் விளையாடி கொண்டிருந்தார்.

Police looking truck driver for allegedly rape case

அப்போது அங்கு வந்த தவசி பெருமாள் கலாவதியை தனியாக அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இதை வெளியே சொல்ல கூடாது என கலாவதியை தவசி பெருமாள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதை பொருட்படுத்தாத அவர் இச்சம்பவம் குறித்து கலாவதி தனது தாயாரிடம் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை பலாத்காரம் செய்த தவசி பெருமாள் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சித்ரா ஆகியோரை தேடி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police looking truck driver for allegedly raped a 13 year old girl in Tuticorin.
Please Wait while comments are loading...