பாவம் குற்றாலம்.... காற்றில் பறக்கும் உயர்நீதிமன்ற உத்தரவு!
குற்றாலம்: உயர்நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தால் குற்றாலத்தின் நீர் மாசுப் படத்தொடங்கியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி 7 மலைகளை கடந்து அங்குள்ள மூலிகைகளில் படர்ந்து நோய் தீர்க்கும் அரிய நீராக மாறி புனிதத்துவம் வாய்ந்ததாக போற்றப்படும் சித்ரா நதி குற்றால அருவியாய் கொட்டி இங்குவரும் சுமார் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகளின் தேக நோயும், மேக நோயும் போக்கி உடலுக்கும், உள்ளத்திற்கும் உற்சாகத்தை அள்ளித்தரும் அருவியாய் இந்த அருவி விளங்குகிறது.

இங்கு உற்பத்தியாகி கொட்டும் நீர் புனிதம் நிறைந்ததாகவும் அதனால் இந்த அருவியில் குளித்தால் மருத்துவக்குணம் நீரில் உள்ளதாகவும் இதன்காரணமாக இங்கு குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் நீராடும் போது எண்ணெய்,சோப்பு,ஷேம்பு போட்டுக் குளிக்க கூடாது என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கு காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் எண்ணைய் குளியல், ஷாம்பு குளியல் போன்றவற்றுக்கு தடையை ஏற்படுத்தியது. இந்த தடையை மறு ஆய்வு செய்யக் கோரி குற்றாலம், ஐந்தருவி பகுதியில் கடையடைப்பு நடந்தது.
அருவிகள் நிரம்பிய பகுதி குற்றாலம். இந்தியாவிலேயே அருவிகள் நிரம்பப்பெற்ற பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள்தான். அதிலும் தமிழகமும், கேரளாவும் முதலிடத்தில் இருக்கின்றன.
இந்தியாவிலேயே அருவிகள் நிரம்பப்பெற்ற ஒரே பகுதி என்றால் தமிழகத்தில் உள்ள குற்றாலம் மட்டுமே. ஐந்தருவி, செண்பகா தேவி அருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, தேனருவி, சிற்றருவி என 7 அருவிகள் ஒருசேர அமையப் பெற்ற குற்றாலம் புராணங்களில் புனிதம் நிறைந்த பகுதியாக போற்றப்படுகிறது.
பல்வேறு சிறப்புக்கள் வாய்ந்த குற்றாலத்தில் கடந்த சில வருட காலமாக குளிக்க வருபவர்கள் அருவி நீரை மாசுபடுத்தும் வண்ணம் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் குளியல் நடத்துவதால் அருவி தண்ணீர் மாசுபடுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு எதிரொலியாக குற்றால அருவியை பாதுகாக்கவும், சுற்றுலா பயணிகளின் அடிப்படை தேவையை மேம்படுத்தும் வகையிலும் 37 நிபந்தனைகளை விதித்து நீதிமன்றம் உத்திரவிட்டது.
இதன் எதிரொலியாக குற்றாலத்தில் சில மாதங்களுக்கு முன் அருவியில் எண்ணை குளியல், தடாகத்தில் துணி துவைப்பது, சோப்பு, ஷாம்பு பயன்படுத்துதல், மது குடித்து விட்டு குளிக்க வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து தடை விதித்தனர். இதையடுத்து அருவிக்கரை பகுதியில் உள்ள கடைகளில் சோப்பு, ஷாம்பு, சீயக்காய் போன்றவை முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டன.ஆயில் மசாஜ் காலி ஆயில் மசாஜ் கடைகள் திறக்கப்படவில்லை. அருவி தடாகத்தில் துணி துவைக்க வந்தோரை போலீசார் திருப்பி அனுப்பினர். தடாகத்தின் 4 புறங்களிலும் கயிறு கட்டி தடை விதிக்கப்பட்டது. அதே போல் சாலை ஓரங்களில் மதுபானங்கள் குடிக்கிறார்களா? என்பதையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
இந்த நடவடிக்கைகளுக்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பு இருந்ததை காணமுடிந்தது. இந்நிலையில் முதற்கட்ட சீசன் முடிந்து இரண்டாம் கட்ட சீசனான ஐயப்ப சீசன் தொடங்கியுள்ளது. இரவும், பகலும் அருவிக் கரைகளில் சரண கோஷம் முழங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அருவிக்கரை பகுதியிலும் சரி, அருவிக்குள்ளும் சரி, சோப்பு, ஷாம்பு போட்டு குளித்து நீதிமன்ற உத்தரவினை புறந்தள்ளி வருகின்றனர்.
அருவி பகுதியில் போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப சாமிகள் விதிகளை மீறி சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி குளிக்கின்றனர். இதனால் விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டு வருகின்றன.
கட்டுப்படுத்துவது யாரோ....!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications