For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள் போராட்டம் வெடிக்கலாம் என அச்சம்.. மெரீனாவில் டூவீலர்கள் செல்ல போலீஸ் தடை!

மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதால் மெரினாவில் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு காவல் துறை தடை விதித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: அரியலூர் அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு மெரினாவில் இளைஞர்கள் ஒன்று கூடாமல் இருப்பதற்காக மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு காவல் துறை தடை விதித்துள்ளது.

அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

Police not allows 2 wheelers near Marina to stop the protest for Anitha's death

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போல் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு மெரினாவில் இளைஞர்கள் ஒன்று கூடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து மெரினாவில் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அப்பகுதி வழியாக இரு சக்கர வாகனங்களுக்கும் தடை விதித்துள்ளனர். மெரினாவில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
Like Jallikattu, there may be chances to gather youngsters in Marina to protest against Anitha's death, Police forces not allow any two wheelers towards Marina beach.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X