மூதாட்டியிடம் இருந்து வெள்ள நிவாரணத்தை அடித்து பிடுங்கிய அடாவடி எஸ்.ஐ.,
சென்னை: சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் மூதாட்டி ஒருவரிடமிருந்து ஸ்பெசல் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் நிவாரண பொருளை பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது விசாரணை நடைபெற்று தற்போது காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கனமழை வெள்ளத்தினால் சென்னை முழுவதும் பாதிக்கப்பட்டது. இயல்பு வாழ்க்கையையே புரட்டி போட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பலரும் வீடு, வாசல் உடமைகளை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவிகள் குவிந்தது.
நிவாரண பொருட்களை சென்னை முழுவதும் பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர். திங்கட்கிழமையன்று சென்னை எம்ஜிஆர் நகர் பிள்ளையார் கோயில் தெருவில் நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. குடிசை பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், வயதானவர்கள் நிவாரண பொருட்களை பெற்றனர்.
நிவாரண பொருட்களை பறித்த போலீஸ்
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வயதான பெண்களே நிவாரண பொருட்களை பெற்றனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த குமார் என்கிற எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தை சேர்ந்த எஸ்.எஸ்.ஐ குமார் திடீரென நிவாரண பொருட்களை வாங்கி வந்த மூதாட்டி ஒருவரிடமிருந்து அவர் வாங்கி வந்த பொருளை பறித்தார். திடீரென போலீஸ் ஒருவர் தனது கையிலிருந்த நிவாரண பொருட்களை பறித்ததும் அந்த மூதாட்டி அதிர்ச்சியில் உறைந்து நின்றார். எதிர்த்து கேட்கவும் தைரியமில்லை.

அழுத மூதாட்டி
அப்போது இதை வேடிக்கை பார்த்த பெண்கள், அவரிடம் ‘என்னங்க இப்படி அநியாயம் பண்ணுகிறீர்கள்' என கேட்டனர். ஆனால் அந்த எஸ்.எஸ்.ஐ குமார் அவர்களை மிரட்டிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் நிவாரண பொருட்களை வைத்துகொண்டு சிரித்தபடியே மோட்டார் சைக்கிளை உருட்டியபடி சென்றார். நிவாரண பொருளை பறிகொடுத்த மூதாட்டி சோகத்துடன் அழுதபடியே சென்றார்.
அப்போது அங்கு நின்றிருந்த இளைஞர் ஒருவர் இந்த காட்சிகளை செல்போனில் சாமர்த்தியமாக படம் பிடித்து வாட்ஸ் அப்பில் போடவே
இந்த காட்சி சென்னை முழுவதும் உலா வருகிறது.

உயரதிகாரிகள் விசாரணை
இந்த செய்தி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. எஸ்.ஐ அடித்து பிடுங்கும் வீடியோ படக்காட்சியும் ஒளிபரப்பப்பட்டது.
இது பற்றி உயர் அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த போலீஸ் சப்.இன்ஸ்பெக்டரின் பெயர் குமார் என்றும், எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் சட்டம்,ஒழுங்கு பிரிவில் சப்.இன்ஸ்பெக்டராக பணியாற்றுவதும்

காத்திருப்பு பட்டியல்
பாதுகாப்பு பணிக்கு சென்றவர் பாதுகாப்பு பணியை சரிவர செய்யாமல் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் உடனடியாக பணி மாற்றம் செய்யப்பட்டு,தென் சென்னை இணை கமிஷனர் அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். வேறு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ் பிரிவில் அவருக்கு பணி வழங்கப்படும் என்று தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications