எச். ராஜா எங்கே?.. தனிப்படை அமைத்து வலை வீசி தேடுகிறது போலீஸ்
சென்னை: புதுக்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தின்போது போலீஸ் மற்றும் நீதிமன்றம் ஆகியவைக்கு எதிராக அவதூறு பேசிய எச் ராஜாவை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ள நிலையில் அவர் தற்போது தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எச்.ராஜா. டிஜிபி, போலீஸார், உயர்நீதிமன்றம் ஆகியோரை மிகவும் அவதூறாகப் பேசினார்.

இந்த நிலையில் திருமயம் காவல் நிலையத்தில் எச். ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் எச் ராஜாவுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகிறது. எச்.ராஜாவை கைது செய்ய இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையும், இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையும் புறப்பட்டுள்ளது.
இன்று காலையில் மன்னார்குடியில் இருந்த எச் ராஜாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே தாம் கைது செய்யப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கையில் உள்ள அவரது வீட்டை சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே பெண் நிருபர்களை அவதூறாக பேசிய எஸ்வி சேகரை போல் எச் ராஜாவும் தலைமறைவாக இருந்தவாறே முன்ஜாமீன் கோர வாய்ப்புள்ளது. அவர் கைது செய்யப்படுவாரா அல்லது முன்ஜாமீன் பெறுவாரா என்பது நாளைதான் தெரியவரும்.
-
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications