Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாமக்கல் சுப்பிரமணியம் மர்ம மரணத்தின் பின்னணியில் மாஜி அமைச்சர் தலை உருள்கிறது?

நாமக்கல் சுப்பிரமணியத்தின் மர்ம மரணத்தின் பின்னணியில் மாஜி அமைச்சர் ஒருவரது தலையும் உருள்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வில்லங்க அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரான நாமக்கல் சுப்பிரமணியம் மர்ம மரணத்தில் மாஜி அமைச்சர் ஒருவரது தலையும் உருளத் தொடங்கியுள்ளது.

ஜெயலலிதாவின் கடந்த கால ஆட்சியில் ஐவர் அணியில் ஒருவராக வலம் வந்தார் மேற்கு மண்டல அமைச்சர். அப்போது மூன்றெழுத்து கட்டுமான நிறுவனம் ஒன்றை பினாமியாக உருவாக்கி வைத்திருந்தார்.

மூன்றெழுத்து கட்டுமானம்

மூன்றெழுத்து கட்டுமானம்

அரசு ஒப்பந்தங்கள் அந்த மூன்றெழுத்து கட்டுமான நிறுவனத்துக்கு சரமாரியாக போய் சேர்ந்தது. ஆனால் ஜெயலலிதா மீண்டும் முதல்வரான போது நிலைமை தலைகீழாகிவிட்டது. அந்த மாஜி அமைச்சர் இருக்கும் இடமே இப்போது தெரியவில்லை.

நாமக்கல் சுப்பிரமணியம்

நாமக்கல் சுப்பிரமணியம்

அத்துடன் அரசாங்க கட்டுமான ஒப்பந்தங்கள் பலவும் விஜயபாஸ்கரின் நண்பரான நாமக்கல் சுப்பிரமணியத்தின் கட்டுமான நிறுவனத்துக்கு கை மாறின. இதில் மாஜியின் பினாமி நிறுவனம் கடும் கோபத்தில் இருந்து வந்தது.

போட்டுக் கொடுத்த பினாமி

போட்டுக் கொடுத்த பினாமி

இந்த நிறுவனம்தான் விஜயபாஸ்கருக்கும் நாமக்கல் சுப்பிரமணியத்துக்குமான அத்தனை லிங்குகளையும் விலாவாரியாக போட்டு கொடுத்திருக்கிறது. இதனால்தான் விஜயபாஸ்கரை குறிவைத்த அதேநேரத்தில் நாமக்கல் சுப்பிரமணியத்தையும் வளைத்திருக்கிறது ஐடி.

கடிதத்தில் தகவல்

கடிதத்தில் தகவல்

இத்தகவல் நாமக்கல் சுப்பிரமணியம் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் விரிவாகவே எழுதப்பட்டுள்ளதாம். அக்கடிதம் வெளியாகும்போது மேலும் பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+