தொடர் போராட்டங்களால் அச்சம்: காஞ்சி மடத்தை விட்டு வெளியே வராமல் முடங்கிய சங்கராச்சாரியார்கள்!
தொடர் போராட்டங்களால் காஞ்சி மடத்துக்குள்ளேயே சங்கராச்சாரியார்கள் முடங்கி உள்ளனர்.
காஞ்சிபுரம்: தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரருக்கு எதிராக தமிழகம் முழுவதும் உக்கிரமான போராட்டங்கள் தொடருகின்றன. இதனால் காஞ்சி சங்கராச்சாரியார்களை வெளியே செல்ல வேண்டாம் என எச்சரித்து 3 நாட்களாக சங்கர மடத்திலேயே பாதுகாத்து வருகிறது போலீஸ்.
தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்கவில்லை இளைய சங்கராச்சாரி விஜயேந்திரர். இது தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் சங்கர மடங்களை முற்றுகையிட்டும் விஜயேந்திரர் உருவபடம், கொடும்பாவிகளை எரித்தும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. விஜயேந்திரருக்கு எதிராக பல இடங்களில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திராவிடர் கழகமும் சங்கர மடங்களை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. தொடர்ச்சியான இந்த போராட்டங்களைத் தொடர்ந்து சங்கரச்சாரிகளான ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரையும் மடத்தை விட்டு வெளியே வரவே கூடாது என போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் தங்களிடம் அனுமதி பெறாமல் வெளியே செல்ல வேண்டாம் எனவும் போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் ஏராளமான போலீசார் சங்கர மடத்தின் முன்பாகவும் 3-வது நாளாக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சங்கரச்சாரிகள் இருவரும் சங்கர மடத்துக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.,
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications