கருணாநிதிக்கு ரத்த அழுத்த பிரச்சினை.. தொண்டர்கள் கண்ணீர்.. பாதுகாப்பு வளையத்தில் காவேரி மருத்துவமனை
கருணாநிதிக்கு ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் தொண்டர்கள் கண்ணீர் வடித்தபடி உள்ளனர்.
Recommended Video

சென்னை: கருணாநிதிக்கு ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு டிரக்யாஸ்டமி கருவி நீக்கப்பட்டு பின்னர் புதிய கருவி பொருத்தப்பட்டது. இதையடுத்து அவருக்கு கடந்த 24-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து வதந்தி பரவியது. கருணாநிதிக்கு ஒன்றுமில்லை, அவர் நலமாக இருக்கிறார் என்று ஸ்டாலின் பேட்டி அளித்தார். இதையடுத்து கடந்த வியாழக்கிழமை ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் கோபாலபுரத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர்.
இதையடுத்து ஒவ்வொரு தலைவர்களாக கோபாலபுரத்துக்கு வருகை தந்தபடி இருந்தனர். இந்நிலையில் நேற்று காய்ச்சலும் நோய்தொற்றும் குறைந்துவிட்டது என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
பின்னர் நள்ளிரவில் ரத்த அழுத்தம் குறைந்ததை அடுத்து அவர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து 20 நிமிடங்களிலேயே அவரது ரத்த அழுத்தம் சீரானது என்று மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவரை காண தொண்டர்கள் மருத்துவமனைக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இன்றும் மருத்துவமனைக்கு தலைவர்கள் வருவர் என்பதால் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications