வேன் ஓட்டும்போது ஹெல்மெட் அணியாதது ஏன்? டிரைவரின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைத்த "அடடே" போலீஸ்
வேனை ஓட்டிய போது ஹெல்மெட் அணியாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய போலீஸார் அந்த வேன் ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்ய பழனி போலீஸார் பரிந்துரைத்துள்ளனர்.
பழனி: பழனியில் வேனை ஓட்டும் போது ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி அபராதம் விதித்தத்துடன் அவரது உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (35). வாடகை வேன் டிரைவர். இவர் கடந்த 17-ஆம் தேதி ஒட்டன்சத்திரத்தில் இருந்து கேரளாவுக்கு வேனில் காய்கறிகள் ஏற்றி சென்றார்.
வழியில் சத்திரப்பட்டி போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேனையும் நிறுத்தினர்.

ஆவணங்கள் சரிபார்ப்பு
அப்போது வேனின் பர்மிட், காப்பீடு, வேன் ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்டவற்றை போலீஸார் சரிபார்த்தனர். எல்லாம் சரியாக இருந்த போதிலும் போலீஸார் அபராதம் விதித்து ரசீது கொடுத்தனர்.

ஹெல்மெட் அணியவில்லை
ரசீதில் ராஜ்குமார் வேனை ஓட்டியபோது ஹெல்மெட் அணியாததால் அவரிடம் ரூ.100 வசூலித்ததாக போலீஸார் ரசீது அளித்தனர். இந்த ரசீதின் அடிப்படையில் ஒட்டன்சத்திரம் மோட்டார் வாகன அலுவலகத்தில் இருந்து ராஜ்குமாருக்கு ஒரு நோட்டீஸ் வந்துள்ளது.

உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது
அந்த நோட்டீஸில், ‘வேனின் பதிவு எண்ணை குறிப்பிட்டு, ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. மேலும், வாகனத்தை ஹெல்மெட் அணியாமல் இயக்கியதால் ஏன் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யக்கூடாது. இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். தவறினால் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திகைத்த ராஜ்குமார்
இந்த நோட்டீஸால் ராஜ்குமார் திகைத்து போனார். வேன் ஓட்டும் போது ஹெல்மெட் அணியாததற்கு போலீஸார் அபராதம் விதித்தனர். அதையும் பார்க்காமல் மோட்டார் வாகன ஆய்வாளர் உரிமத்தை ரத்து செய்யவுள்ளது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது ராஜ்குமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் பைக்கில் சீட் பெல்ட் அணியவில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications