சென்னையில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்... பூட்டிய வீட்டில் இருந்து 4 பெண்களின் அழுகிய உடல்கள் மீட்பு
சென்னை: சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் பெண்கள் 4 பேரின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் சீனிராஜ். சென்னை ராயப்பேட்டையில் உள்ள முத்து தெருவில் கடந்த 4 ஆண்டுகளாக, அவரது மனைவி சந்தனமீனா, மகள்கள் பவித்ரா, பரிமளா மற்றும் சினேகாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக வீட்டின் வெளிக்கதவு பூட்டிய நிலையிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் வீடு பூட்டப்பட்டு இருப்பதற்கான காரணத்தை சீனிராஜிடம் கேட்டுள்ளார். அப்போது பதற்றம் அடைந்த சீனிராஜ் முன்னுக்கு பின்னாக பேசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், ராயப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது, அங்கு அழுகிய நிலையில், சீனிராஜின் மனைவி மற்றும் மகள்கள் என 4 பேர் சடலமாக கிடந்துள்ளனர். இதையடுத்து சடலங்களை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான சந்தனமீனாவின் கணவர் சீனிராஜை தேடி வருகின்றனர். மர்மமான முறையில் 4 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications