முடிஞ்சா பிடிச்சு பாருங்க... சவால் விட்ட என்கவுண்டர் சகுனி கார்த்திக்
Recommended Video

மதுரை : மதுரையில் பத்து நாளில் ஒரு சம்பவம் நடக்கும் என்றும் காவல்துறையினர் முடிந்தால் தடுத்துப் பாருங்க என்று சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சகுனி கார்த்திக காவல்துறையினரை மிரட்டிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
மதுரையில் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய இரண்டு ரவுடிகள் இரு தினங்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்டனர். இருவரும் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்தனர். அவர்களை கைது செய்ய முயன்ற போது போலீசாரை தாக்கினர். இதனையடுத்து நடந்த சண்டையில் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனிடையே என்கவுண்டர் சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு சகுனி கார்த்திக் உடன் காவல்துறை அதிகாரி ஒருவர் பேசிய ஆடியோ வாட்ஸ்அப்பில் வலம் வருகிறது. அந்த ஆடியோவில், காவல்துறையினரை மிரட்டும் தொனியிலும் சவால்விடும் தொனியிலும் பேசியுள்ளான் ரவுடி கார்த்திக்.
நாங்களும் மனிதர்கள் தானே... ஏன் எங்களை தொந்தரவு செய்றீங்க என்று கேட்கும் சகுனி கார்த்திக்கிடம்,
ஏன் சண்டை போட்டு அடிச்சீங்க...இது தேவையா என்று காவல் அதிகாரி கேட்கிறார்.
தெரியாமல் நடந்து விட்டது.... அது சும்மா நடந்தது என்று கூறுகிறார் சகுனி கார்த்திக், தொடந்து பேசிய கார்த்திக், இப்ப என்னதான் சொல்றீங்க. வேணும்னுதான் அடித்தேன் என்னையை பிடிக்க முடியுமா என்று கேட்கிறார்.
அதற்கு காவல்துறை அதிகாரி, தேவையில்லாம பேசாத போனை வைப்பா என்ற சொல்கிறார். உடனே கார்த்திக், இன்னும் 10 நாளில் ஒரு சம்பவம் மதுரையில நடக்கப் போகுது முடிஞ்சா தடுத்து பாருங்க என்றும் சவால் விட்டு பேசுகிறார்.
அதற்கு அந்த அதிகாரியோ, ஒண்ணுமில்லைப்பா போனை வைப்பா என்று கூறி போலீஸ் தொலைபேசி இணைப்பை துண்டிக்கிறார். இதனையடுத்தே சகுனி கார்த்திக், அவனது கூட்டாளியை தேடி வந்த போலீஸ், சிக்கந்தசாவடியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த கார்த்திக்கை என்கவுண்டர் செய்தனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications