ஸ்கேன் செய்ய வந்த பெண் நோயாளியின் 4 பவுன் செயினோடு நர்ஸ் மாயம்... போலீஸ் விசாரணை
கோவை: ஸ்கேன்" செய்வதற்கு சென்ற பெண் நோயாளியின் தங்க நகையுடன் தலைமறைவான நர்சைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை, போத்தனூர், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த இப்ராகீம் என்பவரின் மனைவி சைனாபா (25). இவர் கடந்த மாதம் 29-ஆம் தேதி தன்னுடைய வீட்டிலிருந்து கடைவீதிக்கு சென்று கொண்டிருந்த சைனாபா திடீரென மயங்கினார். உடனடியாக சிகிச்சைக்காக சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார் சைனாபா.
திடீர் மயக்கத்தின் காரணம் அறிய அவருக்கு தலையில் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பார்வதி என்ற நர்ஸ், சைனாபாவை ஸ்கேன் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது ‘ஸ்கேன்' செய்கையில் தங்க நகைகள் அணிந்திருக்கக் கூடாது எனக் கூறிய பார்வதி, சைனாபா அணிந்திருந்த நான்கு பவுன் தங்க சங்கிலியை தான் பத்திரமாக வைத்திருப்பதாகக் கூறி வாங்கியுள்ளார்.
ஆனால், ஸ்கேன் முடிந்து வெளியே வந்த சைனாபா, நர்ஸ் பார்வதி மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக போத்தனூர் போலீசில் புகார் அளித்தார் சைனாபா.
அதனைத் தொடர்ந்து மாயமான நர்ஸ் பார்வதியைப் போலீசார் தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications