ரஜினி, பிரபுதேவா, கன்னட நடிகர்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு- டிபிஜி ராஜேந்திரன்
சென்னை: சென்னையில் வசிக்கும் கன்னட நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் பிரபுதேவா உள்ளிட்டோருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவதாக தமிழக டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. அங்கு தமிழ் இளைஞர் தாக்கப்பட்டார். இதனால் தமிழகத்திலும் கர்நாடகா வாகனங்கள் தாக்கப்பட்டன.

உச்சகட்ட வன்முறை
இந்த நிலையில் உச்சநீதிமன்றமானது காவிரியில் தமிழகத்துக்கு மேலும் சில நாட்களுக்கு நீரை திறந்துவிட உத்தரவிட்டது. இதனால் கர்நாடகாவில் திடீரென பதற்றம் ஏற்பட்டு வன்முறை உச்சமடைந்தது.

தேடித்தேடி தீவைப்பு
தமிழர்களின் தொழில் நிறுவனங்கள், வாகனங்கள் தேடி தேடி தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவுடன் தமிழக டிஜிபி ராஜேந்திரன் உட்பட உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

பாதுகாப்பு
இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி ராஜேந்திரன், தமிழகத்தில் கன்னடர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சென்னையில் கன்னட நடிகர்கள், உணவகங்கள், வங்கிகள், பள்ளிகள், விடுதிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ரஜினி, பிரபுதேவா
சென்னையில் வசித்து வரும் கன்னட நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபுதேவா மற்றும் கன்னட முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications