Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆயுதங்களை தேடி சென்ற போலீஸாருக்கு 400 கிலோ செம்மரக்கட்டை... பதுக்கியது ரவுடி பினு?

சென்னையை அடுத்த மலையாம்பாக்கத்தில் ரவுடி பினுவின் கூட்டாளிகளை கைது செய்த இடத்தில் 400 கிலோ செம்மரக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சினிமா பாணியில் கொலை செய்யும் பினு...அதிரவைக்கும் கொடூர தகவல்கள்!- வீடியோ

    சென்னை: சென்னை பூந்தமல்லியை அடுத்த மலையாம்பாக்கத்தில் ரவுடி பினுவின் கூட்டாளிகளை கைது செய்த இடத்தில் 400 கிலோ செம்மரக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனால் ரவுடி பினு செம்மரக்கடத்தலிலும் கொடி கட்டி பறந்தாரா என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

    கேரளத்தை சேர்ந்தவர் ரவுடி பினு. இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரும் இவரது கூட்டாளிகளும் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர்.

    இந்நிலையில் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் பினுவின் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக திரண்ட அவரையும், அவரது கூட்டாளிகளையும் போலீஸார் சுற்றி வளைத்தனர்.

    போலீஸார் வலை

    போலீஸார் வலை

    அப்போது பினு, கணுகு உள்ளிட்ட 3 மூவர் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். பிடிபட்டவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சேலம் விரைந்த தனிப்படை

    சேலம் விரைந்த தனிப்படை

    நம்பர் ஒன் ரவுடியாக உள்ள ராதாகிருஷ்ணனை போட்டு தள்ளுவதற்காக திட்டம் தீட்டியதாக கூறினர். மேலும் பினு உள்ளிட்டோரை தேடி தனிப்படை போலீஸார் சேலம் விரைந்தனர்.

    400 கிலோ செம்மரக்கட்டைகள்

    400 கிலோ செம்மரக்கட்டைகள்

    இந்நிலையில் பினுவும் கூட்டாளிகளும் பிறந்தநாள் கொண்டாடிய ஷெட்டில் ஆயுதங்கள் ஏதும் இருக்கிறதா என்று சோதனை செய்ய போலீஸார் அந்த இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு 400 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    பினு கொடி பறந்தாரா?

    பினு கொடி பறந்தாரா?

    இவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக ஷெட் அமைத்த வேலுவை போலீஸார் தேடி வருகின்றனர். கட்டபஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களை போல் செம்மரக்கட்டை கடத்தலிலும் பினு கொடி கட்சி பறந்தாரா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+