சினிமா பைனான்சியர் போத்ரா, 2 மகன்கள் வங்கி கணக்குகளை முடக்கியது குற்றப்பிரிவு போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கந்துவட்டி புகாரில் கைதான சினிமா பைனான்சியர் போத்ரா மற்றும் அவரது 2 மகன்களின் வங்கி கணக்குகளை முடக்கியது குற்றப்பிரிவு போலீஸ்.

சினிமா பைனான்சியர் போத்ரா வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கந்து வட்டி புகாரில் போத்ரா மற்றும் அவரது மகன்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போத்ரா மற்றும் அவரது மகன்கள் 2 பேரின் வங்கி கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடக்கியுள்ளது.

Police seized Bothra bank account

சினிமா தயாரிப்பாளர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வருபவர் போத்ரா. இவர் பொதுமக்களுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாக திநகரை சேர்ந்த சதீஷ் என்பவர் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் போத்ரவை கைது செய்தனர். அவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல வழக்கில் தொடர்புடையவர்கள் என்று, போத்ராவின் மகன்கள் ககன்போத்ரா, சந்தீப் போத்ரா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

எஸ்ஆர்எம் கல்லூரி நிறுவனர் பச்சமுத்து மீது புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் போத்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+