மாணவி உயிரிழந்த சம்பவம்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவியின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர், சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியில் விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதி கலவரம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை சூறையாடி 40க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீவைத்தனர். மேலும் இந்த கலவரத்தில் போலீசாரும் காயமடைந்தனர். இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் வாட்ஸ் அப் குழு அமைத்து போராட்டக்காரர்கள் ஒன்று கூடி கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இதுபோன்ற அவதூறு செய்திகளை பரப்புவர்களை போலீசார் வலைவீசி தேடி கைது செய்து வருகின்றனர். மாணவி மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான வழக்கு மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை கையாள 18 காவல்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். 6 டிஎஸ்பி-க்கள், 9 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். மேலும், சின்னசேலம் போலீசார் பதிவு செய்த 3 குற்ற வழக்குகள், அது தொடர்பான ஆவணங்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த குழுவினர் உளுந்தூர்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர், இதில் மூன்று பிரிவுகள் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை அடையாளம் காண்பது என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை குறித்து காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டனர். சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபிநவ் தலைமையிலான காவல் அதிகாரிகள், பள்ளியில் ஆய்வு நடத்தினர்.

பள்ளியில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு காட்சிகளை பதிவு செய்தனர். உளவுத்துறை வீடியோ ஆதாரங்களை கொண்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சிறப்பு புலனாய்வு குழுவினருடன் தடயவியல் நிபுணர் மற்றும் கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்கின்றனர்.
தொடர்ந்து தங்களிடம் உள்ள பல்வேறு புகைப்படங்கள் வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் செய்தி பரப்பியோர் உள்ளிட்ட பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications