விஜயை பார்க்க குவிந்த ரசிகர்கள்.. நெய்வேலியில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீஸ்
மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயை காண அதிக அளவில் ரசிகர்கள் கூடியதால் அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.
நெய்வேலி: நெய்வேலி மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயை காண அதிக அளவில் ரசிகர்கள் கூடியதால் அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.
நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் வேகமாக தயாராகி வருகிறது. கைதி படம் எடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை எடுக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடிக்கிறார்.
நெய்வேலி என்எல்சியில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாஸ்டர் படத்தை பார்க்க கூட்டம் அதிக அளவில் கூடி வருகிறது. வரிசையாக விஜய் ரசிகர்கள் என்எல்சிக்கு சென்று அங்கு ஷூட்டிங்கை பார்த்து வருகிறார்கள்.

அதிக கூட்டம்
இங்கு அங்கு அதிக அளவில் ரசிகர்கள் கூடினார்கள். விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சாதாரண பொது மக்களும் அங்கு அதிக அளவில் கூடினார்கள். இந்த ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு நடிகர் விஜய் இன்று மதியமே வந்துவிட்டார். அதன்பின் அவர் ஷூட்டிங்கால் பிஸியாகிவிட்டார். பின் மாலையில்தான் அவர் ரசிகர்களை பார்ப்பதற்காக வெளியே வந்தார்.

எப்படி பெண்கள்
முக்கியமாக பெண்கள்தான் அதிக அளவில் விஜயை பார்க்க குவிந்து இருந்தனர். கல்லூரி முடித்துவிட்டு பலர் விஜய் பார்க்க அங்கே வந்திருந்தனர். மாணவர்கள், என்எல்சி ஊழியர்கள் பலர் அங்கே குவிந்து இருந்தனர். இதனால் பாதுகாப்பிற்கு அங்கே போலீஸ் வரவழைக்கப்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக அசம்பாவிதம் ஏற்பாடாமல் இருக்க அங்கே போலீஸ் மொத்தமாக குவிக்கப்பட்டது.

ஆனால் போலீஸ் வந்தும்
ஆனால் போலீஸ் வந்தும் கூட அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கூட்டம் காரணமாக ரசிகர்கள் சிலர் மீது போலீசார் லத்தி மூலம் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் போலீஸ் அப்படி தாக்குதல் நடத்தியும் அங்கிருந்து கூட்டம் வெளியே செல்லவில்லை. விஜயை பார்த்துவிட்டுதான் செல்வோம் என்று அங்கு மொத்தமாக எல்லோரும் நின்றார்கள். அதன்பின் விஜய் வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தார்.
|
எப்படி புகைப்படம்
பின் ரசிகர்கள் உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் என்எல்சி ஊழியர்கள் சிலர் விஜயுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதன்பின் அங்கிருந்து போலீசார் சிலரும் விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இன்னும் ஒரு வாரத்திற்கு என்எல்சியில் மாஸ்டர் பட ஷூட்டிங் நடக்க உள்ளது. இதனால் அங்கு வரும் நாட்களில் ரசிகர்கள் அதிக அளவில் ரசிகர்கள் குவிய வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications