'சிதம்பரம்'.. டாக்டர் ராமதாஸ்.. திருமாவளவன்: டென்ஷனில் போலீஸ்!
சிதம்பரம்: சிதம்ரம் நாடாளுமன்றத் தொகுதியில் ஒரே நாளில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் சுற்றுப்பயணம் செய்வதால் பரபரப்பு காணப்படுகிறது. போலீஸாரும் சற்றே டென்ஷனாக உள்ளனர்.
குறிப்பாக அரியலூர், பெரம்பலூர் மா்வட்டங்களில் பதட்டம் காணப்படுகிறதாம். சிதம்பரம் தொகுதியானது, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளையும் உள்ளடக்கி வருகிறது. இந்தத் தொகுதியில் பாமக போட்டியிடவுள்ளது. அந்த வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று இரவு சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட லெப்பைக்குடிகாடு பகுதியில் இன்று இரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் திருமாவளவன் பங்கேற்கிறார். அதேசமயம், அரியலூரில் ராமதாஸ் பெண்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
சமீப காலமாக பாமகவினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் மோதல் போக்கில் இருந்து வருகிறார்கள். அதிலும் தர்மபுரி விவகாரத்துகுப் பின்னர் இரு தரப்பினரும் உஷ்ணத்துடன் மோதி வருகின்றனர்.
இதனால் டாக்டர் ராமதாஸும், திருமாவளவனும் அருகருகே உள்ள ஊர்களுக்கு வருவதால் பதட்டம் காணப்படுகிறது. போலீஸாரும் டென்ஷனாக உள்ளனர்.
எந்தவிதப் பிரச்சினையும், மோதலும் வெடித்து விடாத வகையில் போலீஸார் பலத்த பாதுகாப்புக்கும், கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications