"இல்லத்தரசிகளை" வைத்து வாடகைக்கு வீடு பிடித்து விபச்சாரம் நடத்திய போலீஸ் ஏட்டு... மதுரையில்!
மதுரை: மதுரையில் ஒரு நூதன விபசாரத்தை போலீஸார் கண்டுபிடித்து 3 பேரைக் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் போலீஸ்காரர் என்பது அதிர்ச்சிகரமானது. மற்ற இருவரும் குடும்பத் தலைவிகள் என்பது இன்னொரு அதிர்ச்சிச் செய்தி.
தூத்துக்குடியைச் சேர்ந்த முருகன் என்ற 23 வயது மாணவர்தான் இந்த விபச்சாரக் கும்பல் சிக்க முக்கியக் காரணம். பாலமுருகனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் பென்னாடம் ஆகும்.
இவர் தூத்துக்குடியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார். இவர் 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்குப் போவதற்காக தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு வந்துள்ளார். அங்கு மாட்டுத் தாவணி பஸ் நிலையம் வந்த அவர் பஸ் ஏறக் காத்திருந்தார்.
அப்போது அவரிடம் 34 வயதான மாரிமுத்து என்பவர் அணுகியுள்ளார். என்னிடம் அழகு அழகான பெண்கள் இருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் என்று ஆசை காட்டியுள்ளார். இதையடுத்து முருகன் அவருடன் சென்றுள்ளார்.
மீனாம்பாள்புரத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்றார் மாரிமுத்து. அங்கு பாலமுருகனிடம் இரண்டு நடுத்தர வயதுள்ள பெண்களைக் காட்டியுள்ளார். அவர்களைப் பார்த்த முருகன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனக்கு வேண்டாம் என்று கூறி அங்கிருந்து வெளியேறி விட்டார்.
நேராக செல்லூர் காவல் நிலையம் சென்ற அவர் நடந்ததைக் கூறினார். புகாரும் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர்.
விரைந்து வந்த போலீஸார் சம்பந்தப்பட்ட வீட்டில் ரெய்டு நடத்தினர். அதில் 37 வயதான கலைச்செல்வி மற்றும் 32 வயதான பிரியா என்கிற ராதா ஆகியோர் சிக்கினர். இருவரும் திருமணமானவர்கள். கணவர், குழந்தைகளுடன் இருப்பவர்கள். இவர்களை மாரிமுத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
மாரிமுத்துவையும் போலீஸார் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். விசாரணை போலீஸாருக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. மாரிமுத்து ஒரு புரோக்கர் ஆவார். இவரை வைத்து விபச்சாரத்தை நடத்தி வந்தவர் பாலமுருகன் என்ற போலீஸ்காரர் ஆவார். இவர் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக இருந்து வருகிறார்.
மீனாம்பாள்புரத்தில் விபச்சாரம் நடந்த வீடு ஒரு பிராஞ்ச்தானாம். இதே போல நகரில் பல இடங்களில் வீடுகளை வாடகைக்குப் பிடித்து விபச்சாரத்தை பெரிய அளவில் நடத்தி வந்துள்ளார் பாலமுருகன் என்ற விவரம் தெரிய வந்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பாலமுருகனிடம் தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர் எங்கெல்லாம் வீடு பிடித்து விபச்சாரம் செய்து வந்தார், அவரது தொழிலில் உதவியவர்கள் யார் யார், பெண்கள் குறித்த விவரம் உள்ளிட்டவற்றை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications