தினகரன் ஆதரவாளருடன் ஓபிஎஸ் அணியின் தென்மாவட்ட பிரமுகர் திடீர் சந்திப்பால் பரபரப்பு
தினகரனின் தீவிர ஆதரவாளரை ஓபிஎஸ் அணியின் தென்மாவட்ட பிரமுகர் ஒருவர் திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னையில் வலம் வரும் தினகரனின் தீவிர ஆதரவாளரை ஓபிஎஸ் அணியின் தென்மாவட்ட பிரமுகர் ஒருவர் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே அந்த தென்மாவட்ட பிரமுகர் தனித்து விடப்பட்டார்... அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் கோபத்தை சம்பாதித்திருந்தார்.

தர்மயுத்தத்தால் மறுவாழ்வு
அவரது சொந்த மாவட்டத்தில் சீண்டுவார் யாருமில்லாத நிலையில்தான் இருந்து வந்தார். ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்தியதால் 'மறுவாழ்வு' பெற்று லைம் லைட்டுக்கு வந்தார்.

காத்திருந்தும் பயனில்லை
இரு அணிகளும் இணைந்த நிலையில் சொந்த மாவட்டத்தில் பார்களை மீண்டும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறார் அந்த பிரமுகர். கட்சியில் பதவி கிடைக்காவிட்டாலும் இந்த பார்கள் கிடைக்கட்டுமே என காத்திருக்கிறார்.

தினகரன் தீவிர ஆதரவாளருடன் சந்திப்பு
அதற்கும் வழியே இல்லாத நிலை வந்துவிட்டதாம். இதனால் ரொம்பவே அதிருப்தியில் இருக்கும் அந்த பிரமுகர் திடீரென சென்னைக்கு வந்து தினகரன் கோஷ்டி நபரை பார்த்திருக்கிறார்.

ஆட்சியை கலைத்துவிடுங்கள்
அப்போது ரொம்பவே புலம்பித் தள்ளியிருக்கிறார். இந்த ஆட்சியை கலைக்கிற வேலையையாவது தினகரனை செய்ய சொல்லுங்களேன் என நொந்து போய் கூறினாராம்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications