தமிழகப் பத்திரிகையாளர்கள் கைது- வைகோ, நெடுமாறன், வேல்முருகன், தமிழிசை கண்டனம்!
சென்னை: திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டியதை பதிவு செய்ததற்காக தமிழக பத்திரிகையாளர்கள் மீது ஆந்திர போலீசார் தாக்குதல் நடத்தி கைது செய்ததற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ, உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தமிழக அரசியல் கட்சியினர் இன்று அதிகாலை கறுப்புக் கொடி காட்டினர். இதை பதிவு செய்து கொண்டிருந்த தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர்கள் மீது ஆந்திர போலீசார் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அத்துடன் அவர்களின் கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் அடித்து நொறுக்கப் பட்டன. பின்னர் பலமணி நேரம் கழித்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஆந்திரா போலீசாரின் இந்த அட்டூழிய தாக்குதலுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

மதிமுக பொதுச்செயலர் வைகோ:
தமிழக பத்திரிகையாளர்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஆந்திர மாநில போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜபக்சேவை அனுமதித்த நரேந்திர மோடி அரசை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழக அரசியல் கட்சியினர் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது விழுந்த அடி என்பது இந்திய ஒருமைப்பாட்டின் அடி என்று எச்சரிக்கிறேன். உடனே தமிழக பத்திரிகையாளர்களையும் அரசியல் கட்சியினரையும் விடுவிக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு ஆந்திரா மாநில அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். உடைக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் உபகரணங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்
தமிழக அரசியல் கட்சியினர் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது ஆந்திரா காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இத்தாக்குதலை நடத்திய ஆந்திரா அரசை மத்திய அரசும் தமிழக அரசும் கண்டிக்க வேண்டும்.
திருப்பதியில் கைது செய்யப்பட்ட அனைவரையும் பாதுகாப்பாக தமிழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்:
தமிழீழத்தில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு தமிழினத்தின் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் மீறி இந்தியப் பேரரசு செங்கம்பளம் விரித்து வரவேற்றதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

திருப்பதிக்கு வந்த கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக நூற்றுக்கணக்கான வாகனங்களில் நேற்று (டிசம்பர் 9)-ந் தேதி மாலை சென்ற ஆயிரக்கணக்கான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் ஆந்திரா எல்லையில் அந்த மாநில காவல்துறையினரால் தடுக்கப்பட்டோம். பின்னர் ஆந்திரா எல்லையிலேயே ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தி இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் கொடும்பாவியையும் எரித்தோம்.
இந்த நிலையில் இன்று அதிகாலை திருப்பதி ஆலயத்தில் வழிபாடு நடத்திய படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஜனநாயக வழியில் அமைதியான முறையில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.
ஆனால் ஆந்திரா காவல்துறையினரோ கருப்புக் கொடி காட்டிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றியத் தலைவர் பாலமுருகன், குறிஞ்சிப்பாடி ஒன்றியத் செயலாளர் சுந்தர், கடலூர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சத்திரம் குமார், திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர் சிவா உள்ளிட்ட 25 பேரை மிருகத்தனமாக தாக்கி அவர்களது வாகனங்களை நாசமாக்கி தனித்தனியே சிறையிலடைத்துள்ளது.
இதேபோல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி தலைவர்களான மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், வித்யாதரன் எனப் பலரையும் ஆந்திரா காவல்துறை கொடூரமாகத் தாக்கி சிறையிலடைத்துள்ளது. ஆந்திர காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
அத்துடன் இந்த கருப்புக் கொடி சம்பவத்தை பதிவு செய்ய சென்ற திருத்தமணி மாலை முரசு செய்தியாளர் மீது நேற்று திருப்பதியில் ஆந்திரா காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இன்று அதிகாலை தமிழ்நாட்டைச் சேர்ந்த சன் டிவி செய்தியாளர் குணசேகரன், தந்தி தொலைக்காட்சி செய்தியாளர் காண்டீபன், புதிய தலைமுறை செய்தியாளர் மணிகண்டன் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களையும் ஆந்திரா காவல்துறை மிகக் கொடூரமாக தாக்கியும் அவர்களது செய்தி உபகரணங்களை உடைத்தும் பறிமுதல் செய்தும் கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டிருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அண்டை மாநிலமான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் "ராஜபக்சேவின் ஏவல்" படைபோல ஆந்திரா காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நேற்றும் இன்றும் நடந்து கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது.
திருப்பதியில் கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மறுமலர்ச்சி திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டு செய்தியாளர்களை உடனே விடுவித்து பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்களை ஆந்திரா காவல்துறை திருப்பி ஒப்படைக்க வேண்டும். நாசமாக்கிய செய்தி உபகரணங்களுக்கான உரிய நட்ட ஈட்டை ஆந்திரா அரசு வழங்க வேண்டும்.
இந்தத் தாக்குதலுக்கு ஆந்திரா அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுடன் ராஜபக்சேவின் கூலிப்படையாக குண்டர் படையாக நின்று தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை உடனே தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
அமைதி வழியில் போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளையும் தங்களது கடமையை செய்ய சென்ற தமிழ்நாட்டு செய்தியாளர்களையும் உடனே ஆந்திரா காவல்துறை விடுதலை செய்யாவிட்டால் தமிழ்நாட்டுக்குள் அந்த மாநில பேருந்துகள் எதனையும் அனுமதிக்க மாட்டோம்.
அத்துடன் தமிழ்நாட்டில் இயங்கும் அத்தனை ஆந்திரா அரசுக்கு சொந்தமான நிறுவனங்களையும் முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை நடத்துவோம் என்றும் எச்சரிக்கிறேன்.
பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ்::
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை ஒட்டி தமிழ் மக்களின் எதிர்ப்புகளையும், தமிழக தலைவர்களின் நிலைகளையும் செய்தியாக்கச் சென்ற தமிழக பத்திரிகையாளர்களை, காவல் துறை இன்ஸ்பெக்டர் சத்ருகன் சின்ஹா மற்றும் அவருடைய படையினர் விரட்டி அடித்து அனுப்பப்பட்டுள்ளனர்.
பத்திரிகையாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்துவதோடு மட்டுமில்லாமல், அவமானப்படுத்துவது பெரும் கண்டனத்திற்குரியதாகும்
இதேபோல் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications