For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை - ஸ்டாலின் வேதனை!

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவைப் போல் தமிழக அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக இல்லை என திமுக பொருளாலர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக செயல்படவில்லை என திமுக பொருளாலர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

தியாகராயநகரில் திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அதன் பொருளாலர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

political parties are not united on the issue of Cauvery - stalin accuses

அப்போது கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் காணொளி ஆட்சி நடைபெற்றதாக குற்றம் சாட்டினார். தற்போது இந்த ஆட்சியில் எதுவும் நடைபெற முற்றிலும் முடங்கிப் போயிருப்பதாகவும் ஸ்டாலின் கூறினார்.

காவிரியில் தண்ணீர் பெற பிரதமரிடம் முறையிடுவது குறித்து இந்த அதிமுக அரசு எந்த முயற்சியும் எடுக்க வில்லை என்று புகார் தெரிவித்தார்.

அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக்கூட கூட்ட முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது என்று கூறிய ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் திமுக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டியதை சுட்டிக்காட்டினார்.

இதில் சில கட்சிகள் பங்கேற்க வில்லை என்ற அவர், காவிரி பிரச்சனையில் கர்நாடக கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக உள்ளன. ஆனால் தமிழக கட்சிகளிடம் தான் ஒற்றுமை இல்லை என்றார்.

English summary
some parties did not participate when DMK conduted the all party meeting. In karnataka all the parties are united but in tamilnadu there is no unity among the political parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X