விளம்பரத்துக்காக காங். தலைவர்களின் கொடும்பாவியை எரிக்கிறார்கள்...: விஜயதாரணி
சென்னை: விளம்பரத்துக்காக காங்கிரஸ் தலைவர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுவதாக தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதை கண்டித்து, தமிழர் முன்னேற்ற படை அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நக்மா, குஷ்பு சுந்தர் ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்து இருக்கிறார்கள்.

தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மீனவர்கள் பிரச்சினைக்கு இலங்கை அரசே காரணம் என்று முன்பு கூறினார். இப்போது மீனவர்கள் பிரச்சினைக்கு மீனவர்களே காரணம் என்று கூறுகிறார்.
தமிழக மீனவர்கள் நலன் மீது துளியும் அக்கறையில்லாத பா.ஜ.க அரசையும், பெயரளவுக்கு கடிதம் வாயிலாக மீனவர்கள் கைதை கண்டிக்கும் அ.தி.மு.க. அரசையும் கண்டிக்காமல் விட்டு விட்டு காங்கிரஸ் கட்சி தலைவர்களின் உருவ பொம்மைகளை யார் தூண்டுதலின் பேரில் எரித்தார்கள்.
உண்மையிலேயே தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பார்களானால், உலகம் சுற்றும் மோடி மற்றும் கடிதம் மட்டுமே எழுதும் ஜெயலலிதா உருவ பொம்மைகளை எரிப்பதற்கு தைரியம் இல்லாமல், வீண் விளம்பரம் தேடும் நோக்கத்தோடு, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை கொச்சைப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த செயல் மீண்டும் தொடருமேயானால், கை கட்டி கொண்டு வேடிக்கை பார்க்க மாட்டோம், தக்க பதிலடி கொடுக்கப்படும்' என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications