வாக்கு இயந்திரத்தில் பழுது... திருச்சி மினிக்கியூரில் வாக்குப்பதிவு 3 மணி நேரம் நீட்டிப்பு
திருச்சி: வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக திருச்சி மினிக்கியூரில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு வாக்குப்பதிவு நேரத்தை 3 மணி நேரம் நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். ஆனால், பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, வாக்குப்பதிவு நடைபெறுவது பாதிக்கப்பட்டது.

அந்தவகையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை மினிக்கியூரில் 205வது வார்டுக்கான வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்கு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. 78 வாக்குகள் பதிவான நிலையில் 88 என வாக்குப்பதிவு இயந்திரம் காட்டியதால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டது. இதனால் அங்கு சிறிதுநேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு வாக்குப்பதிவை 3 மணி நேரம் நீட்டிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, இரவு 9 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications