பொதுமக்களே.. ஒலி இல்லாமல், புகையில்லாமல் தீபாவளியை கொண்டாடுங்களேன்... மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
ஒலி மாசு மற்றும் புகை மாசு இல்லாமல் தீபாவளியை கொண்டாட மாசுக்கட்டுப்பாடு வாரியம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வரும் 29ம் தேதி ஒலி மாசு மற்றும் புகை மாசு இல்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களிடம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை வெடிக்க கூடாது என்றும் நீதிமன்ற விதிமுறைகளை கடைபிடிக்காமல் தயாரித்துள்ள பட்டாசுகளை வாங்க வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தியுள்ளது.
இதுதவிர, மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் போன்ற அமைதியான பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும், குடிசைகள் அதிகம் உள்ள பகுதிகளில் ராக்கெட் போன்ற பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications