6 மாதத்திற்குள் மது விலக்கை அமல்படுத்துங்கள்... பொன். ராதா கோரிக்கை
நாகர்கோவில்: மது விலக்கை 6 மாதத்திற்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்று தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மது ஒழிப்பு போராட்டத்தின் போது உயிர் இழந்த சசிபெருமாள் குடும்பத்தினருக்கு பொன். ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுவுக்கு எதிராகவும், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரியும் காந்தியவாதி சசிபெருமாள் பல ஆண்டுகள் போராடி சிறைவாசம் அனுபவித்தும், உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். பின்னர் அவர் கடைசி கட்ட போராட்டத்திற்காக தனது உயிரை அர்ப்பணித்து இருக்கிறார்.

எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொள்கையை அறிவிக்க அரசு முன்வர வேண்டும். சசிபெருமாளின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்த போது, கோவில், பள்ளிக்கூடம் அருகில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று வைத்த கோரிக்கையை கூட அரசு அதிகாரிகள் நிறைவேற்ற முன்வரவில்லை.
6 மாத காலத்திற்குள் தமிழக அரசு மது கொள்கையை குறைக்கவோ அல்லது படிப்படியாக மதுக்கடைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும். இந்த அறிவிப்பு சசிபெருமாளின் உடல் நல்லடக்கம் செய்ய உதவியாக இருக்கும்.
செல்போன் கோபுரத்தில் ஏறி அவரை மீட்கும் பணியின் போது அவர் உயிருடன் இருந்தாரா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இருப்பினும் சசிபெருமாளின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே சசிபெருமாள் தனது கடைசி காலம் வரை போராடிய பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications