மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்ட பணிகள் விரைவில் துவங்கப்படும் - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்ட பணிகள் விரைவில் துவங்கப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டப் பணிகள் விரைவில் துவங்கி முடிக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணாண் தெரிவித்துள்ளார்.
மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு ரூ1,816 கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இதனிடயே 2011- ம் ஆண்டு பணிகள் நிறுத்தப்பட்டன. 19 கிமீ தூரமுடைய இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். 30 சதவீத பணிகள் முடிந்த நிலையில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் அந்த பணிகள் மீண்டும் துவங்கப்பட உள்ளது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சென்னை மதுரவாயல் - துறைமுகம் சாலை தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மதுரவாயல் - துறைமுகம் சாலை பணியை மீண்டும் தொடங்குவது பற்றி குழு அமைக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு திட்டத்தை ஆய்வு செய்யும். பறக்கும் சாலை திட்டத்தை விரைவில் தொடங்கி முடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது என்பது தவறானது.
தமிழக அரசின் சார்பில் சில பரிந்துரைகள் மட்டுமே அளிக்கப்பட்டுளளன. பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டு சாலை திட்டத்தை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications