விசயம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் - என்ன சொல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன்
விஷயம் தெரிந்தவர்கள் பிரதமர் கூறியதை புரிந்து கொள்வார்கள் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வரை சந்தித்தேன் என்றார்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது என பிரதமர் விளக்கியுள்ளார். தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவு தருவதாக முதல்வரிடமே பிரதமர் கூறியுள்ளார் என்றார்.
விஷயம் தெரிந்தவர்கள் பிரதமர் கூறியதை புரிந்து கொள்வார்கள் என அவர் விளக்கம் அளித்துள்ளார். கட்டுப்பாட்டுடன் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நேற்று போராட்டக்குழுவினரை சந்தித்து பேசினேன். இது தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் தவேயே சந்தித்து முறையிட உள்ளேன், தமிழ்நாட்டில் இருந்து ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகளும் அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications