மோடி ஸ்டைலில் மண்டியிட்டு வணங்கிய பொன் ராதாகிருஷ்ணன்.. கைதட்டி வரவேற்ற பாஜகவினர்!
நாகர்கோவில் கன்னியாகுமரி தொகுதியில் வென்றதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.யும், மாநில பாஜக தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன், மேடையில் மண்டியிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதைப் பார்த்து பாஜகவினர் கைதட்டி வரவேற்றனர்.
கன்னியாகுமரி தொகுதியில் பிரமாண்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டத்தில் முகாமிட்டு ஒன்றியம், நகரம் வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

நாகர்கோவில், ஈத்தாமொழி, மைலாடி, தெரிசனங்கோப்பு, பத்மநாபபுரம், அழகியமண்டபம், வெள்ளிச்சந்தை, குலசேகரம் என நன்றி அறிவிப்பு கூட்டங்கள் நடந்த அனைத்து மேடைகளிலும் மண்டியிட்டு வணங்கி கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது கட்சியினரும் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதுபற்றி அவர் கூறுகையில், என்னுடைய வெற்றிக்காக பாடுபட்டால் உங்கள் முன் மண்டியிட்டு நன்றி தெரிவிப்பேன் என தேர்தல் பிரசாரத்தின்போது கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தேன். அதை தற்போது நிறைவேற்றி வருகிறேன் என்றார்.
ஆனால் சமீபத்தில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது மோடி இப்படித்தான் மண்டியிட்டு வணங்கினார். அதையே பொன் ராதாகிருஷ்ணனும் காப்பி அடித்துள்ளார் என்று சிலர் கூறுகிறார்கள்.
எப்படியோ.... நன்றி கூறி வணக்கம் வைப்பது ஆரோக்கியமானதுதானே...!
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications