செயல் தலைவராக மு.க. ஸ்டாலின்.. பொன். ராதாகிருஷ்ணன், ஜி.கே. வாசன் வாழ்த்து
திமுக செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பொன். ராதாகிருஷ்ணன், ஜி. கே. வாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை: திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திமுகவின் பொதுக் குழுக் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் பொருளாளரான மு.க. ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார். திமுகவின் சட்டவிதிகள் திருத்தப்பட்டு இந்தப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்ட உடன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அரசியல் பயணத்தில் ஸ்டாலின் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் வாழ்த்து கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசனும், மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை மற்றும் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications