ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன் !
நாகர்கோவில்: ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டிருந்த நிலையில் விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். இந்தாண்டு எப்படியும் ஜல்லிக்கட்டு நடத்தி விடலாம் என்று இருந்த மதுரை மக்களுக்கு இந்த தடை உத்தரவு ஆவேசத்தை தந்துள்ளது. இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெற தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பாஜக இணை அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும் என கூறினார். மேலும் ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து நாளை டெல்லி செல்ல உள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென இடைக்கால தடை விதித்திருப்பது தென் மாவட்ட மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் தினத்திற்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா ? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications