தமிழகத்தில் வாடகை நாற்காலி ஆட்சி நடக்கிறது - பொன். ராதாகிருஷ்ணன்
சட்டசபையில் திமுகவினர் நடந்து கொண்டதை ஏற்க முடியாது என்றும் தமிழகத்தில் வாடகை நாற்காலி ஆட்சி நடக்கிறது என்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் தற்போது வாடகை நாற்காலி ஆட்சி நடைபெறுகிறது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இந்த ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொன் ராதாகிருஷ்ணன் கோவில்பட்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் பல அரசு பள்ளிகள் மூடப்பட்டதற்கு இந்த அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். மாணவர்களுக்கு நல்ல கல்வி தராமல் கடந்த, 50 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளனர் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

நீட் தேர்வு
அரசுப் பள்ளிகளை மூட அரசுக்கு உரிமை கிடையாது என்றும் குற்றம் சாட்டிய அமைச்சர், நீட் தேர்வு என்பது மாணவர்கள் முன்னேற்றத்திற்காகத்தான். ஆனால் அதை கொண்டு வர விடாமல் தடுக்கின்றனர் என்றும் கூறினார். தேர்வு நடக்கும் போது மட்டும் அதுபற்றி பேச கூடாது என்றார்.

விசாரணைக் கமிஷன்
சட்டசபையில் திமுகவினர் நடந்து கொண்டதும், சபாநாயகர் பேசியதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். சட்டசபையில் ஸ்டாலின் தாக்கப்பட்டது கண்டனத்திற்கு உரியது. சம்பவம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அரசு நீடிக்க வேண்டும்
தமிழ்நாட்டிற்குக் கொடுக்கக்கூடிய முழு ஒத்துழைப்பும் கொடுப்போம். இந்த அரசு நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதே நேரத்தில் நம்முடைய விருப்பத்தை நிறைவேற்ற அவர்கள் தயாராக இல்லை என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வாடகை ஆட்சி
தமிழகத்தில் வாடகை ஆட்சி நடக்கிறது என்றும் இந்த ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நீடிக்க விரும்பவதாக கூறிய பொன். ராதாகிருஷ்ணன், அடுத்த நிமிடமே, ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது என்று கூறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications