போராட வேண்டியது தமிழகத்திலா? இல்லை டெல்லியிலா? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
சென்னை: போராட வேண்டியது தமிழகத்திலா? இல்லை டெல்லியிலா? என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரியும், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 13-ம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதலில் அமைதியாக அறவழி போராட்டம் நடத்தினார்கள். அறவழிப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக "சங்கு ஊதி போராட்டம்", "சடலம் போல் படுத்துப் போராட்டம்", "ஒப்பாரி வைக்கும் போராட்டம்" எல்லாம் நடத்திப் பார்த்து, இறுதியில் "மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளும்" போராட்டத்தில் இறங்கி தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ள விவசாயிகள் முயன்றது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப் போராட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் சமூகநல அமைப்பினர் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு பல்வேறு அமைதி வழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் போராட்டம் 15வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பல்வேறு கேள்விகளை தனது டிவிட்டர் மூலம் எழுப்பியுள்ளார். அதில்காரிஃப் பயிர் நிலைமை குறித்து நவம்பர் மாதம் தமிழக அரசு அறிக்கை மத்திய அரசிற்கு தந்திருக்க வேண்டும். தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மத்திய அரசை மட்டும் குறை சொல்லி போராட்டம் நடத்தும் நோக்கம் என்ன?
போராட வேண்டியது தமிழகத்திலா? இல்லை டெல்லியிலா? இங்கு போராடுவோர் இனியேனும் உண்மையை உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன். விவரமான அறிக்கையை மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளதா? என்பதை போராட்டக்காரர்கள் கேள்வி கேட்டதுண்டா? எனக் பல்வேறு கேள்வி எழுப்பியுள்ளார்.
போராட வேண்டியது தமிழகத்திலா? இல்லை டெல்லியிலா? இங்கு போராடுவோர் இனியேனும் உண்மையை உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்(2)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) March 27, 2017
விவரமான அறிக்கையை மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளதா? என்பதை போராட்டக்காரர்கள் கேள்வி கேட்டதுண்டா? அப்படியெனில் இவர்கள் (1)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) March 27, 2017
விவசாயிகள் தற்கொலை 400 க்கும் மேல் தமிழகத்தில் நடந்துள்ளது எனில் எத்தனை வழக்குகள் அதுகுறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான (1)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) March 27, 2017
குறை சொல்லி போராட்டம் நடத்தும் நோக்கம் என்ன?(2)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) March 27, 2017
தெரியுமா ? என வேளாண்துறை செயலாளர் கேள்வி கேட்க சரியான பதிலளிக்க முடியாமல் இருந்தவர்கள். சிலர் தூண்டிவிட மத்திய அரசை மட்டும் (1)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) March 27, 2017
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications