அகவை 68ஐ அடைந்துள்ள ‘அம்மா’வுக்கு பிறந்தநாள் வாழ்த்து: பொன்.ராதா வாழ்த்து
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளா.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை அதிமுகத் தொண்டர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
கட்சித் தலைவர்களும் ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
அகவை 68-ஐ அடைந்துள்ள தமிழக முதல்வர் ‘அம்மா'வுக்கு, எனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
அன்னை பராசக்தியின் அருளால் தாங்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.
பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் காலத்திற்கு பின்னால் அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வை உருக்குலையாமல் உயர்த்தி எடுத்து அவரது காலத்தில் இருந்ததை விட அதிக வலுவுள்ளதாக மாற்றி தமிழகத்தின் முதல்-அமைச்சராக 3 முறை பொறுப்பு வகித்து சிறப்பு பெற்ற தாங்கள், வாழ்வில் மேலும் சிறப்பு பல பெற அன்னை பராசக்தி தங்களுக்கு அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை!












Click it and Unblock the Notifications