தைப் பொங்கலும் வந்தது... காரைக்குடியில் களை கட்டிய பொங்கல் விழா!
காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் தைப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா 11.01.16 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு காரைக்குடி நகராட்சி ஆணையாளர் பெ. விஜயலக்ஷ்மி அவர்கள் தலைமையேற்றார். காரைக்குடி கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்கம் வட்டாரத் தலைவர் அரிமா. சா. பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார். சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர். மு.சு.கண்மணி விழா பேருரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரை
கார்த்திகேயன் பள்ளி ஆசிரியை பா. லெட்சுமி, கவிஞர் பாரி. முடியரசனார், கவிஞர். எழில் வேந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

புகையில்லா போகி
காரைக்குடி நகராட்சி ஆணையாளர் தனது வாழ்த்துரையில், புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவதற்கான அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கி, தூய்மையின் முக்கியதுவத்தை எடுத்துக் கூறினார்.

சமத்துவப் பொங்கல்
இவ்விழாவையொட்டி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து பள்ளி வளாகத்தில் பொங்கல் செய்து சமத்துவப் பொங்கலை மிகவும் சிறப்பாக கொண்டாடினர். மாணவர்கள் பட்டு வேட்டி, பட்டு சட்டையுடனும், மாணவிகள் பட்டு பாவடையுடனும், ஆசிரியர்களும் தமிழ் பாரம்பரிய உடையில் வந்து பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழர் திருநாளின் சிறப்பு
மாணவர்கள் தமிழர் திருநாளின் சிறப்பு குறித்து நாட்டுப்புறபாடல் பாடியும், நடனம் ஆடியும் அனைவரையும் மகிழ்வித்தனர். மாணவர்களுக்கு ஊசி நூல் கோர்த்தல் போட்டி, சாக்கு போட்டி, நீர் நிரப்புதல் போட்டி, பலூன் உடைத்தல் போட்டி, உருளைக்கிழங்கு சேகரித்தல் போட்டி, லக்கி கார்னர் போட்டி, உரி அடித்தல் போட்டி, கோலப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

விதம் விதமான போட்டிகள்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்களை பட்டதாரி ஆசிரியர் திருமதி. சித்ரா அவர்கள் தொகுத்து வழங்கினார்.

சிறப்பான ஏற்பாடுகள்
காரைக்குடி கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்கம் செயலாளர் அரிமா. எஸ். இராமநாதன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி மற்றும் கோமதி செய்திருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications